ஆசன எண்ணிக்கைக்கே பயணிகள் அனுமதி - பஸ், ரயிலில் முகக் கவசம் கட்டாயம் : போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

ஆசன எண்ணிக்கைக்கே பயணிகள் அனுமதி - பஸ், ரயிலில் முகக் கவசம் கட்டாயம் : போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் இனம் காணப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து அமைச்சு இன்று முதல் பயணிகள் போக்குவரத்து நடைமுறைகளில் பின்பற்றப்பட வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கிணங்க பயணிகள் முகக் கவசம் அணிவது கண்டிப்பானது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளில் அனைத்து பயணிகளும் சாரதியும் நடத்துனரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரயில் பயணிகள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்பாக கைகளை கழுவுவது, முகக் கவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சேவையில் உள்ள அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பஸ் வண்டிகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற திட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று அச்சம் குறைவடைந்ததைத் தொடர்ந்து, அதனை பெரிதளவில் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில், உடன் அமுலுக்கு வரும் வரையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment