கணவன், மனைவிக்கு கொரோனா - நீர்கொழும்பு அங்காடி கடைத் தொகுதிக்கு பூட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, October 19, 2020

கணவன், மனைவிக்கு கொரோனா - நீர்கொழும்பு அங்காடி கடைத் தொகுதிக்கு பூட்டு

நீர்கொழும்பு - மாநகர சபை அங்காடி கடைத்தொகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு அங்காடி கடைத் தொகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள இருவரும் கட்டானவில்- கிம்புலாப்பிட்டி பகுதியியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக இன்னும் கண்டறியப்படவில்லை.

குறித்த வர்த்தகர், அண்மையில் திவூலப்பிட்டியில் நடந்த திருமண வைபவமொன்றில் பங்கேற்றதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad