தாய்ப்பால் புரைக்கேறியதில் 4 தினங்களேயான ஆண் சிசுவொன்று மரணித்து விட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் - சின்னவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கனகரெட்ணம் செல்வராணி தம்பதிகளின் பெயரிடப்படாத குழந்தையே மரணித்துள்ளது.
வழமைபோன்று குழந்தையின் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் அருந்தச் செய்த வேளையில் பால் புரைக்கேறிய நிலையில் குழந்தை மரணித்துள்ளது.
இதேவேளை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வதியும் மற்றொரு தாய் குழந்தை பிரசவித்த நிலையில் அக்குழந்தை உடனே மரணித்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சமபவங்கள் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment