முதல் சுற்றினை தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

முதல் சுற்றினை தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(இராஜதுரை ஹஷான்) 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் சுற்றினை பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையை கேந்திரமாக கொண்டு பரலவடைந்துள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாவே நாட்டில் கூலி பெறுபவர்களின் வாழ்க்கை பெறும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

தற்போதும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை கொவிட்-19 வைரஸ் இரண்டாம் சுற்றாக பரலவடைய முக்கிய காரணியாக உள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பினை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வழங்குகிறோம் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். 

கொவிட்-19 வைரஸ் ஆரம்பத்தில் பரவலடைந்த காலத்தில் அரசாங்கம் பொதுத் தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகள் ஊடாக மக்களுக்கு 5000 ரூபாவை வழங்கியது. தற்போது தேர்தல் ஏதும் கிடையாது. 

ஆனால் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையை கேந்திரமாக கொண்டு பரவலடைந்துள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பல பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment