முல்லைத்தீவில் வீதி திருத்தப் பணிகள் மேற்கொண்டு வரும் ஊழியர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

முல்லைத்தீவில் வீதி திருத்தப் பணிகள் மேற்கொண்டு வரும் ஊழியர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முல்லைத்தீவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி திருத்தப் பணிகள் மேற்கொண்டு வரும் ஊழியர்களின் இருவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து வேலைக்குச் சென்ற நிலையில் வட மாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைவாக தளிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் வீதி திருத்தப் பணிகள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. சுகாதார நடைமுறைகளுடன் ஊழியர்கள் வீதி திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கம்பஹா மாவட்டத்திலிருந்து சென்ற இரு ஊழியர்கள் வட மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது . குறித்த இருவரையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தொடர்ந்து வீதி திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கொழும்பிலிருந்து பொருட்கள் எடுத்து செல்வதில் சில இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றோம். 

இருந்தும் உரிய முறையில் பணிகளை மேற்கொள்வதற்கு வட மாகாண ஆளுநர், ஒப்பந்ததாரரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad