உடன் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப மட்டுமே பயணிகள் செல்லலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

உடன் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப மட்டுமே பயணிகள் செல்லலாம்

அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று வெளியிட்டார்.

ஏற்கனவே இந்த திட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று அச்சம் குறைவடைந்தததைத் தொடர்ந்து, அதனை பெரிதளவில் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில், உடன் அமுலுக்கு வரும் வரையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்தார்.

கம்பஹா - திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணுக்கும் அவரது 16 வயதுடைய மகளுக்கும், கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

குறித்த பகுதிகளுக்கு நுழைவது மற்றும் வெளியேறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

இந்த நிலையிலேயே பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என உடன் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment