ரிசாத் பதியுதீனை கைது செய்ய சிஐடியினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

ரிசாத் பதியுதீனை கைது செய்ய சிஐடியினர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட மூவரை கைது செய்வதற்காக சிஐடியினர் விடுத்த பிடியாணை வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமே சிஐடியினரின் பிடியாணை வேண்டுகோளை நிராகரித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பிடியாணை அவசியமில்லை என நீதவான் பிரியந்த லியனகே பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சிஐடியினரை உரிய விதத்தில் செயற்படுமாறும் 27ம் திகதி நீதிமன்றத்தில் விபரங்களை தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

பொதுநிதியை முறைகேடு செய்ததது மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே முன்னாள் அமைச்சரைகைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

No comments:

Post a Comment