காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனுமதி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை (13.10.2020) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 08ஆம் திகதி புதன்கிழமை கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 82 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் விஷே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அனைவரும் கம்பஹா மாவட்டத்திலுள்ள தனியார் ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் நாட்டின் நாலாபுறங்களையும் வசிப்பிடமாகக் கொண்ட பெண்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் முதலாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்தும் கொண்டு வரப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் விஷே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.‪ இப்பிரிவு கடந்த புதன்கிழமை 08.10.2020 தொடக்கம் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment