A/L பரீட்சை மத்திய நிலையங்களுக்கு 15,000 ரூபா நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

A/L பரீட்சை மத்திய நிலையங்களுக்கு 15,000 ரூபா நிதியுதவி

நாடு முழுவதும் தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்களுக்கு தலா ரூபா 15,000 வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை இடம்பெறும் உயர்தரப் பரீட்சைகள், 2,648 மத்திய நிலையங்களில் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய, கொவிட்-19 தொற்றை எதிர்கொநோக்கியுள்ள நிலையில், மாணவர்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காக, பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார வசதிகளை உறுதி செய்யும் பொருட்டு, குறித்த மேலதிக நிதி ஒவ்வொரு பரீட்சை மத்தியநிலையங்களுக்கும் ஒதுக்கப்படுவதாக, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 362,824 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment