கொழும்பு 7, சினமன் கார்டன் குடியிருப்புத் தொகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் டினுக குருகே தெரிவித்தார்.
பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் குறித்த இருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment