பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் 69 பிக்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த பகுதியில் அமைந்துள்ள பிரிவேனாவைச் சேர்ந்த 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேரே தனிமைப்படுத்தலில் உள்ளதாக பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 
பிக்குகள் தவிர்ந்த ஏனைய 15 பேர் பிரிவேனாவில் பணி புரிந்து வந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். 
தனிமைப்படுத்தலில் உள்ள பிக்குவின் தாயொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்பத்தப்பட்டதையடுத்தே முன்னெச்சரிக்கையாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
பிரிவெனாவுக்கு சென்று சில நாட்களுக்கு பின்னரே பிக்குவின் தாயார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment