சீனாவில் 6 பேருக்கு கொரோனா - நகரம் முழுவதும் 5 நாட்களுக்குள் 94 லட்சம் பேருக்கு பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

சீனாவில் 6 பேருக்கு கொரோனா - நகரம் முழுவதும் 5 நாட்களுக்குள் 94 லட்சம் பேருக்கு பரிசோதனை

6 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யபட்டதையடுத்து சீனாவின் ஒரு நகரம் முழுவதும் 5 நாட்களுக்குள் 94 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்நாடு முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில்தான் வெளிப்பட்டது. வைரஸ் தொற்று பரவியதும் வேகமாக செயல்பட்டு, உகான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் மாகாணம் முழுவதையும் முடக்கியது. இதன் காரணமாக வெளி மாகாணங்களுக்கு தொற்று பரவுவது கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டது. 

சீன சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி அந்த நாட்டில் இதுவரை 85,578 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரசின் 2வது அலை ஏற்பட்டு விடாமல், தடுக்க அந்நாடு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் பெய்ஜிங் நகர் முழுவதும் மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோ நகரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, , 5 நாட்களுக்குள் அந்த நகரத்தில் உள்ள சுமார் 94 லட்சம் பேருக்கும் பரிசோதனை செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment