சிறுபான்மை மதங்கள், மனித உரிமைகளை மதிக்கும்படி 39 நாடுகள் சீனாவுக்கு அழுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

சிறுபான்மை மதங்கள், மனித உரிமைகளை மதிக்கும்படி 39 நாடுகள் சீனாவுக்கு அழுத்தம்

சிறுபான்மை உய்குர்களின் மனித உரிமைகளை மதிக்கும் படியும் ஹொங்கொங் விவகாரத்தில் கவலை வெளியிட்டும் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கூட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“சிறுபான்மை மதங்கள் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்கள் உரிமைகள் குறிப்பாக சின்ஜியாங் மற்றும் திபெத்தில் மனித உரிமைகளை மதிக்கும்படி சீனாவுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்று மனித உரிமைகள் சந்திப்பு ஒன்றில் இந்த முயற்சிக்குத் தலைமை வகித்த ஐ.நாவின் ஜெர்மனி தூதுவர் கிறிஸ்டோப் ஹகஸ் தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டு அறிவிப்பில் 39 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இதில் அல்பேனியா, பொஸ்னியா உட்பட பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அதேபோன்று ஹெய்ட்டி. ஹொண்டுராஸ் போன்ற நாடுகளும் அடங்கும்.

“சின்ஜியாங்கின் மனித உரிமை நிலை மற்றும் ஹொங்கொங்கின் அண்மைய நிகழ்வுகள் பற்றி நாம் பெரிதும் கவலை அடைந்துள்ளோம்” என்று வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிலும் இது போன்ற தீர்மானம் ஒன்று பிரிட்டன் மூலம் தயாரிக்கப்பட்டபோது 23 நாடுகளே அதில் கையொப்பமிட்டன.

No comments:

Post a Comment