இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

இரு ஆசிரியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

மாளிகாவத்தையில் தனியார் வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உட்பட 28 மாணவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், வகுப்புகள் மற்றும் பாடசாலைகள், விழாக்கள், கூட்டங்கள் என்பன நடத்துவற்கு தடை செய்யப்பட்டள்ளது. 

இந்நிலையிலேயே இவ்வாறு வகுப்புக்களை நடத்திய ஆசியர்கள் உட்பட 28 மாணவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் குறித்த பாடசாலையில் கல்வி நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad