ஓட்டமாவடியில் 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Tuesday, October 13, 2020

ஓட்டமாவடியில் 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. 

இதன் ஓரங்கமாக ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், தம்புள்ளை வியாபார மத்திய நிலையம், கம்பஹா மாவட்டத்திற்குச் சென்று வந்தோர் மற்றும் சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றன.

இதில் 25 பேருக்கு இன்று அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad