20 வது திருத்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்தை நோக்கி எதிர்கட்சியினர் வாகன பேரணி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

20 வது திருத்தத்திற்கு எதிராக பாராளுமன்றத்தை நோக்கி எதிர்கட்சியினர் வாகன பேரணி

சபை அமர்வுகளுக்கு முன்னதாக, 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (21) பாராளுமன்றத்தை நோக்கி வாகனப் பேரணியொன்றை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கைகளில் 20 வேண்டாம் என தெரிவிக்கும் வாசகத்துடனான பட்டி அணிந்து, 20ஆவது திருத்தத்தை எதிர்க்கும் வாசகத்துடனான முகக்கவசங்களையும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது வாகனங்களிலும் 20ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்னாள் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார 20 வது திருத்த்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற முயற்சிகளை முறியடிப்பதற்கு இன்றும் நாளையும் எதிர்க்கட்சி முயலும் என தெரிவித்துள்ளார்.

தனி நபர்களை அச்சுறுத்தி அரசாங்கம் 20 வது திருத்தத்தினை நிறைவேற்ற முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பத்து உறுப்பினர்கள் 20 வது திருத்தத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்கினால் அரசாங்த்தின் முயற்சிகளை தோற்கடிப்பதற்கு அது போதுமானதாக காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முயன்றவர்கள் அனைவரும் தற்போது சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment