20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து சாதகமான விடயங்கள் - அமைச்சர் கெஹெலிய - News View

Breaking

Post Top Ad

Tuesday, October 20, 2020

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து சாதகமான விடயங்கள் - அமைச்சர் கெஹெலிய

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் சாதகமான விடயங்கள் பல பல்வேறு தரப்பினர்களிடமிருந்து கிடைத்திருப்பதாகவும் இந்த ஆலோசனைகள் 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக வெகுஜான ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைதினம் Zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ ஆகியோர் கலந்து கொண்டனர்.

முழுமையான அரசியல் யாப்பு ஒன்றை புதிதாக கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தற்போது புத்திஜீவிகளைக் கொண்ட குழு இன்று இதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் வரும் 6 மாத காலபகுதிக்குள் முழுமையான அரசியல்யாப்பு ஒன்று கிடைக்குமொன்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசியல் அமைப்பிற்கென மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக சர்வ மதத் தலைவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad