அபு ஹின்சா
கடந்த வாரம் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூலத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்த காரணம் என்ன? அந்த திருத்தம் வெற்றி பெறுவதற்கு துணையாக இருந்த விடையத்தில் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு திங்கட்கிழமை பொத்துவில் பிரதே சபையின் தவிசாளர் கலாநிதி எம்.எஸ். அப்துல் வாஸித் தலைமையில் பொத்துவில் பிரதேசத்திலும், செவ்வாய்க்கிழமை (27) அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் காரியாலயத்திலும் இடம்பெற்றது.
இந்த நிகழ்விலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு 20ஆவது திருத்தத்தில் கட்சிக்கு இருந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
மேலும் இதில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச். கியாஸ், பொத்துவில் இளைஞர்கள் காங்கிரஸ் அமைப்பாளர் பி. வசூர் கான் மற்றும் கட்சியின் முக்கியஸ்தரான சட்டத்தரணி சாதீர் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். நசீர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.எம். ஹனீபா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். கிதீர், எம்.எஸ்.எம். அமீன், ஏ.எஸ்.எம். உவைஸ், வட்டார அமைப்பாளர் எம். ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment