20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல, அனைத்து உறுப்பினர்களின் யோசனை : அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல, அனைத்து உறுப்பினர்களின் யோசனை : அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது. எனவே 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கள் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது. 

20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்திற்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

எவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தினால் நான் மாத்திரம் தற்துணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன். 19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவிற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூலக்காரணியாகும். இத்திருத்ததை இரத்து செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment