2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஏல கோட்பாட்டை உருவாக்கியது மற்றும் புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் போல் ஆர். மில்கிரோம் மற்றும் ரொபர்ட் பி. வில்சன் இருவருக்கும் இந்த ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“இவர்கள் இருவரும் ஏலம் எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து கோட்பாடுகளை உருவாக்கினர். வழக்கமான நடைமுறைகளில், பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்ய முடியாதபோது அவற்றை ஏலம் மூலம் எப்படி விற்பனை செய்வது என்பது தொடர்பான ஆய்வுகளை இவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்” என்று இன்று இந்த விருதை அறிவித்த நோபல் குழு தெரிவித்தது.

இவர்களது கண்டுபிடிப்புகள் உலகம் முழுக்க விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோர் ஆகியோருக்கு பலன் கொடுக்கும் என்று அந்தக் குழு நம்பிக்கை தெரிவித்தது.

1969ஆம் ஆண்டு தொடங்கி, 2019ஆம் ஆண்டு வரை மொத்தம் 51 முறை பொருளாதார துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 84 பேர் இந்த பொருளாதார பிரிவின் கீழ் நோபல் பரிசு வென்றுள்ளனர். 

இந்த ஆண்டுக்கான மருத்துவம், பெளதீகம், இரசாயனவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி தொடக்க அறிவிக்கப்பட்டு வந்தது. இதன் கடைசியாக பொருளாதாரத்திற்கான நோபல் விருது இன்று வெளியானது.

No comments:

Post a Comment