நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொத்தணியில் உள்ள மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் ஏனைய 12 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரையில் மினுவங்கொடை கொத்தணியில் மொத்தமாக ஆயிரத்து 608 கொரேனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 685 பேர் தொடர்ந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், இந்த தொற்றில் இருந்து மொத்தமாக மூவாயிரத்து 357 பேர் மீண்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad