சமய நிகழ்வில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

சமய நிகழ்வில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா

ரத்தொளுகமவில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 12 பேர் கொரானா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இவர்களுக்கான பி.சி.ஆர். சோதனைகள் திங்கட்கிழமை நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்றைய தினம் வெளியாகியிருந்தன. 

அம்முடிவுகளிலேயே 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்தொளுகம பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். 

சமய நிகழ்வில் கலந்துகொண்ட குழுவில் மேற்கண்ட 12 பேர் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் நோயாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் குடியிருப்புகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த சில நாட்களில் பி.சி.ஆர். சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 12 பேரில் நான்கு பேர் ரத்தொளுமகவில் வசிப்பவர்கள், ஏனையவர்கள் கலவத்தை மற்றும் முதுவாடிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad