புரட்டி எடுக்கும் கொரோனா - 10 லட்சத்து 32 ஆயிரத்து 709 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

புரட்டி எடுக்கும் கொரோனா - 10 லட்சத்து 32 ஆயிரத்து 709 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 32 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது. 

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,095 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 863 பேரும், பிரேசிலில் 664 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 606 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 79 லட்சத்து 4 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 256 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 58 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 32 ஆயிரத்து 709 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 2,13,523
பிரேசில் - 1,45,431
இந்தியா - 99,773
மெக்சிகோ - 78,078
இங்கிலாந்து - 42,268
இத்தாலி - 35,941
பெரு - 32,609
பிரான்ஸ் - 32,155
ஸ்பெயின் - 32,086
ஈரான் - 26,567
கொலம்பியா - 26,397

No comments:

Post a Comment