ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்! - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறி, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

அதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறும் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் டயானா கமகே உள்ளிட்ட 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒன்பது நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.

20 ஆவது அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விபரம்

1. டயனா கமகே 
2. அருணாசலம் அரவிந்த குமார் 
3. இஷாக் ரஹ்மான் 
4. பைஸல் காசிம் 
5. எச்.எம்.எம்..ஹாரிஸ் 
6. எம்.எஸ்.தௌபீக்
7. நசீர் அஹமட் 
8. ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் 
9. எம்.எம்.எம். முஷாரப்

No comments:

Post a Comment

Post Bottom Ad