தகவல் வழங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒற்றர்களுக்கு கிடைக்கும் பணப்பரிசில்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

தகவல் வழங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒற்றர்களுக்கு கிடைக்கும் பணப்பரிசில்கள்

No smoke without fire! | SRI LANKA
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தேடுதல் நடவடிக்கையை அதிகரிப்பதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட விதமாக தகவல்கள் வழங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து செலுத்தப்படும் பரிசுத் தொகையின் மதிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவினால் அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், கட்டளை அதிகாரிகள் / பணிப்பாளர்கள், பிரதேச அதிகாரிகள், மாவட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட தகவல் வழங்குவோர்களுக்காக பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து பணப்பரிசில்களை வழங்க 2019.09.18 திகதியிடப்பட்ட 2663/2019 இலக்க பொலிஸ் சுற்றுநிரூபத்துடன் 02/2019 இலக்க குற்றத்தடுப்பு சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விதந்துரைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக அந்த பணப்பரிசில் வழங்கும் நடவடிக்கை 2020-12-31 திகதியில் இடம்பெறவுள்ளதுடன், அன்றையதினம் அதன் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அந்த காலத்தை மேலும் நீடிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்கையில் அதற்கான பணப்பரிசில் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், ஒரு குற்றவியல் விசாரணையின் போது துப்பாக்கியொன்றை கண்டுபிடிப்பதற்காக கீழே காட்டப்பட்டுள்ள பணப்பரிசில் வழங்குதல் அந்த குற்றத் தடுப்பு பிரிவிற்கு வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தொடர்புடைய தொகையை செலுத்துவதற்கு ஒருபோதும் தடை ஏற்படாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அறிக்கையொன்றின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

என்றபோதிலும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் குற்றத்தடுப்பு பிரிவிற்கு உரிய பரிசுத் தொகைக்கான விண்ணப்பம் கோருகையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு தொடர்பில் பணப் பரிசில் கோரப்பட்டுள்ளதா அல்லது பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஆலோசனைகளுக்கு அமைய தனிப்பட்ட விதத்தில் தகவல் வழங்கியவர்களுக்கு பணப் பரிசில் வழங்கும் போது ஏதாவதொரு அநீதி இழைக்கப்பட்டதாக கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் குறித்த பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட விசாரணைப் பிரினால் மாத்திரம் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் கைக்குண்டு கண்டெடுக்கப்படும் பட்சத்தில் பணப் பரிசில் வழங்கும் முறை கீழே காட்டப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒற்றர்களுக்கு கிடைக்கும் பணப்பரிசில்கள்

No comments:

Post a Comment