முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் உயிருக்கு ஆபத்து - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் உயிருக்கு ஆபத்து

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கை காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அவரின் சட்டத்தரணி உயிர்த்த ஞாயிறு குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்த விடயங்கள் தீங்கிழைக்கும் மற்றும் கற்பனையான விடயங்கள் என மைத்திரிபால சிறிசேன அறிக்கை வெளியிட்டுள்ளதன் மூலம் ஹேமசிறி பெர்ணான்டோவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளார் என அவரின் சட்டத்தரணி டிலான் ஜெயசூரிய உயிர்த்த ஞாயிறு குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அறிக்கை மூலம் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவை பலவீனப்படுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கி வரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்த முயன்றுள்ளார் என ஹேமசிறி பெர்ணான்டோவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்காரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad