அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர பாடத்திட்டத்தை நிறைவு செய்து குறித்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக புதிய விதிமுறைகளை தயாரித்து கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி இந்த வித்யாசத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரச கரும மொழி தேர்ச்சியை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக தற்போது காணப்படும் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற் கொண்டு குறித்த புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதனுடன் தொடர்புடைய யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தடங்கல்கள் நீங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment