போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கலால் வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கலால் வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் கைது

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கலால் வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜயவர்தனபுர கலால் சுற்றிவளைப்பு பிரிவின் கட்டுப்பாட்டாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கொஸ்கம - களுஅக்கல பகுதியில் நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹங்வெல்ல பகுதியிலிருந்து லபுகம நோக்கி பயணித்த கார் ஒன்றை சோதனையிட்ட போது, போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, போதைப் பொருள் கடத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் மற்றுமொருவர் ஹங்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் கடந்த 23 ஆம் திகதி கலால் வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவரினூடாக போதைப் பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கட்டுப்பாட்டாளர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து மென்டஸ் ரகத்தை சேர்ந்த 653 கிராம் 380 மில்லி கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் கார் ஒன்றும் 05 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment