தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன் எதிர்பாராத விபத்தில் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 27, 2020

தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன் எதிர்பாராத விபத்தில் பலி

ஏ.எச்.ஏ. ஹூஸைன் 

தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்றிருந்த சிறுவன் எதிர்பாராத வீதி விபத்தில் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - தேத்தாத்தீவு பகுதியில் சனிக்கிழமை மாலை (26.09.2020) இடம்பெற்ற விபத்தில் புதிய காத்தான்குடி-6, அக்பர் பள்ளி வீதியை அண்டி வசிக்கும் 12 வயதுடைய பள்ளிச் சிறுவனான முஹம்மது அலியார் முஹம்மது ருஷ்கி என்பரே பலியானவராகும்.‪

இந்த விபத்துப்பற்றி மேலும் தெரியவருவதாவது, வீதியால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அதன் டயரில் காற்று சடுதியாக வெளியேறிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவை மோதியுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் ஓட்டோவிற்கு பின்னால் நின்றிருந்த சிறுவன் மீது ஓட்டோ மோதியதனால் சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment