ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு சார்ந்தவர்களுக்கு அரசாங்கத்தின் புதிய சலுகை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு சார்ந்தவர்களுக்கு அரசாங்கத்தின் புதிய சலுகை

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்களின் மின்சார கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து பிராந்திய பொறியியல் அலுவலகங்களுக்கும் மின்சார சபையால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கோவிட்-19 கொரோனா தொற்று வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த குறித்த திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை அறிகையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு, 2020 மார்ச் முதலாம் திகதி முதல் 2020 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை திரட்டப்பட்ட மின்சார கட்டணங்கள் செப்டெம்பர் 01 திகதி 2020 முதல் 12 மாத சம தவணைகளில் செலுத்தப்படும்.

குறித்த காலகட்டத்தில் மின்சாரம் துண்டிக்க வேண்டாம் என மின்சார சபையின் பிராந்திய பொறியியல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிவாரணங்களை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் பொது அதிகாரிக்கும், இலங்கை மின்சார சபையின் தனியார் நிறுவனத்தின் பொது அதிகாரிக்கும் கடந்த 02.09.2020 அன்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை மின்சார சபை சகல அலுவலகங்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment