கொரோனா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார அமைச்சுக்கு இரு வார கால அவகாசம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

கொரோனா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார அமைச்சுக்கு இரு வார கால அவகாசம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

சுகாதார அமைச்சினால் நாளாந்தம் அறிக்கையாக வெளிவந்து கொண்டிருக்கும் கொரோனா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார அமைச்சு இரு வார கால அவகாசம் கேட்டது. 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். 

அந்த வகையில், இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட திகதி யாதென்பதையும், அத்திகதி முதல் இன்று வரை நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நோயாளிகளின் எண்ணிகை தனித்தனியே யாதென்பதையும் அத்திகதி முதல் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிகை யாதென்பதையும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும் இச்சபைக்கு அறிவிப்பாரா? எனக்கேட்டிருந்தார். 

இக்கேள்விக்கு பதிலளிக்க உரிய நேரத்தில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சபைக்கு வருகை தராத நிலையில், சுகாதார அமைச்சர் சார்பில் அரச தரப்பு பிரதம கொறடா ஜோன்சன் பெர்னாண்டோ இக்கேள்விகளுக்கு பதிலளிக்க இரு வார கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். 

பின்னர் சுகாதார அமைச்சர் சபைக்கு வந்தார். இருந்தாலும் சுகாதார அமைச்சர் உரிய நேரத்தில் சபையில் இருந்தாலும் குறித்த கேள்விக்கு இரண்டு வார கால அவகாசம் கோறுவது நிச்சயிக்கப்படட்டதாகும்.

No comments:

Post a Comment