மஞ்சள் தூளுக்கான நிர்ணய விலை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

மஞ்சள் தூளுக்கான நிர்ணய விலை நீக்கம்

ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லைறை விலையினை நிர்ணயித்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பானது இன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒரு கிலோ மஞ்சளுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை 750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பாவனையாளர்கள் அதிகார சபையானது இன்றையதினம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் மஞ்சள் நிர்ணய விலை தொடர்பான முன்னைய வர்த்தமானி அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment