இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா

இந்தியாவின் மத்திய வீதி போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய வீதி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் நிதின் கட்காரி. இவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிறரது பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad