போரினால் பாதிக்கப்பட்ட வாகரைக் கிராமங்களை தத்தெடுக்கிறது கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

போரினால் பாதிக்கப்பட்ட வாகரைக் கிராமங்களை தத்தெடுக்கிறது கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள கட்டுமுறிவு ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களை கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியம் தத்ததெடுத்து அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சமுதாய மேம்பாட்டு மன்றம், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம் என்பவற்றுடன் இணைந்து மேற்படி செயல் திட்டத்தை அமுலாக்க கனடாத் தமிழர் அறக்கட்டளை அமைப்பு ஆயுத்தமாகியுள்ளது.

இதன் முதல் கட்டமாக பிரதேச மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் பி. ஜீவனேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (20.09.2020) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுதாய மேம்பாட்டு நிறுவனத் தலைவரும் மட்டக்களப்பு மாநகர முதல்வருமான தியாகராசா சரவணபவன், அமைப்பின் உபசெயலாளர் எம். சுரேஸ்கரன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபக தலைவர் எஸ் தேவசிங்கன், பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்கள், மீனவர் அமைப்புகள் விவசாய அமைப்புகள், மாதர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், பாடசாலை பழைய மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கள விஜயத்தை மேற்கொண்ட குழுவினர் கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலம் கடந்த போதிலும் பல தமிழ் கிராமங்கள் இன்றும் கண்டு கொள்ளப்படாமல் அபிவிருத்திக்காக ஏங்கிநிற்பதாக அங்கு மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment