மகளீர் எல்லே தொடரில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

மகளீர் எல்லே தொடரில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

46வது தேசிய விளையாட்டு விழாவின் முன்னோடியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழாவில் மகளீர் எல்லே தொடரில் ஏறாவூர்ப்பற்று சார்பாக பங்குபற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

மகளீருக்கான எல்லே தொடர் ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இச்சுற்றில் 6 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மகளீர் அணிகள் பங்குபற்றின. 

இறுதிப்போட்டி ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) மற்றும் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகப் பிரிவு விளையாட்டுக் கழகங்களிடையே நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோறளைப்பற்று தெற்கு (கிரான்) கழக அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர்ப்பற்று சார்பில் பங்குபற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 13 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெத்தாடிய கோறளைப்பற்று தெற்கு மூன்று ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனடிப்படையில் ஏறாவூர்ப்பற்று சார்பில் பங்குபற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 10 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

No comments:

Post a Comment