பொலிஸ் நாய்களை ஏலம் விடக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

பொலிஸ் நாய்களை ஏலம் விடக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

பொலிஸ் மோப்ப நாய்களுக்கு தட்டுப்பாடு - Tamilwin
பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பொலிஸ் துறைக்கு சேவை செய்த பொலிஸ் நாய்களை ஏலம் விட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் நாய்களை ஏலம் விடக்கூடாது, அவற்றை இறக்கும் வரை காவல் துறையின் பராமரிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் செயல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவுக்கு அறிவித்துள்ளார். 

பொலிஸ் கென்னல்ஸ் பிரிவில் 10 வயதுடைய 25 பொலிஸ் மோப்ப நாய்களை ஏலம் எடுத்ததாக சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏலத்தின் மூலம் காவல் துறை 310,000 ரூபாவுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியதாகவும் சுட்டிக்காட்டிப்பட்டிருந்தது. 

இந்த ஏலம் விடப்பட்ட பொலிஸ் நாய்கள் அனைத்தும் போதைப் பொருள் விற்பனையாளர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸாருக்கு மிகுந்த சேவையை ஆற்றியுள்ளன. 

இந்நிலையில் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஏலமானது சர்ச்சையை ஏற்படுத்தியருந்தமையும் குறிப்பிடத்தக்தகது.

No comments:

Post a Comment

Post Bottom Ad