சர்வதேச ஜனநாயக தினம் உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்ய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

சர்வதேச ஜனநாயக தினம் உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்ய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மஹிந்த

(இராஜதுரை ஹஷான்) 

சர்வதேச ஜனநாயக தினம் உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்ய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்துள்ள நாட்டின் பிரதமராக சர்வதேச ஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செய்தி வெளியிட்டுள்ளார். 

சர்வதேச ஜனநாயக தினத்திற்காக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனநாயகத்தை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உலக நாடுகளை ஒன்றுப்படுத்தவும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தியது. 

மனித குலத்தின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர்களின் வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி அத்துடன் கிடைக்கப் பெறவேண்டிய உரிமைகள் ஜனநாயக ரீதியில் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும். 

எமது நாட்டு மக்கள் உயிர்வாழும் உரிமைக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாகப்பதற்காகவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றதையும் நினைவூட்டுகிறேன். 

தீவிரவாதத்தை இல்லாதொழித்து நாட்டில் சமத்துவத்தை உறுதிப்படுத்த போராடியது இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தவே. ஜனநாயகத்தை பாதுகாக்க ஆட்சியமைக்கும் போது தொடர்ந்து குரல் கொடுப்போம். 

தேர்தல் காலங்களிலும், பிற்பட்ட காலங்களிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம் என்பது பெருமைக்குரியது. 

இனிவரும் காலங்களிலும் அமைதியான, ஜனநாயக முறையில் தேர்தல்கள் இடம் பெறும் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையினை பாதுகாக்க பொறுப்புடன் செயற்படுவோம். 

ஜனநாயகத்தை பாதுகாத்து, இறைமைகிக்க இராச்சியம், , பிற நாடுகளின் நல்லுறவு, ஆகியவற்றை கட்டியெழுப்ப சர்வதேச ஜனநாயக தினத்தில் இலங்கை பிரஜைகள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment