வெள்ளை ஆடையை அணிந்தால் தூய்மையானவர்கள் என ஆகிவிடாது - ஆளும் கட்சியை சரமாரியாக விமர்சித்து சபையில் ஆக்ரோசமாக பேசினார் அனுரகுமார - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

வெள்ளை ஆடையை அணிந்தால் தூய்மையானவர்கள் என ஆகிவிடாது - ஆளும் கட்சியை சரமாரியாக விமர்சித்து சபையில் ஆக்ரோசமாக பேசினார் அனுரகுமார

பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பது யார்? அனுரகுமார கேள்வி - lifeberrys.com  Tamil இந்தி
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கடந்த கால செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தும், குற்றம் சுமத்தியும் சபையில் பேசிய அனுரகுமார திசாநாயக எம்.பி தமக்கு ஒரு தடவையேனும் ஆட்சி அதிகாராம் கிடைத்தால், பாராளுமன்றத்தில் உள்ள பல குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை காட்டுவேன் என்றும் கூறினார். 

பாராளுமன்றதில் நேற்று மத்திய வங்கி நிதி ஒதுக்கீடு மீதான சபை ஒத்தி வைப்பு விவாதத்தால் அனுரகுமார திசாநாயக்க எம்.பி உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் குறிக்கிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜே.வி.பி. உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து, முன்னைய ஆட்சியில் செய்ததென்ன என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் தெரிவித்த அனுரகுமார எம்.பி. ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் எனக்கு இருக்குமென்றால், குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு இருக்குமென்றால் இந்த பாராளுமன்றத்தில் பலர் இருக்க மாட்டார்கள். அவ்வாறு எனக்கொரு பலம் இருக்குமென்றால் இந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தில் எனக்கு எதிராக எழுந்து பேச ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். ஜோன்ஸ்டன் போன்றவர்கள் இன்று இந்த சபையில் எனக்கெதிராக பேசக்கூட வந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவ்வாறான ஒரு பலம் எனக்கு இல்லாது போயுள்ளதை நினைத்து வருத்தப்படுகின்றேன். 

உங்களுடன் இணைந்து ஆட்சி செய்துள்ளேன், நான் குற்றவாளி என்றால் இப்போதும் உங்களின் ஆட்சிதான் உள்ளது, இதற்கு முன்னர் நீண்ட காலமாகவும் உங்களின் ஆட்சிதான் இருந்தது. இந்த காலத்தில் நன்றாக விசாரணை நடத்தி எனக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க முடியும். முடிந்தால் இப்போதாவது என்னை தண்டித்து காட்டுங்கள் பார்க்கலாம். 

ஆனால் எமக்கு ஒரு தடவை ஆட்சி அதிகாராம் கைக்கு கிடைத்தால் இந்த பாராளுமன்றத்தில் உள்ள பல குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை காட்டுவேன். ஒரு ஊழல் வாதியும், குற்றவாளியும் இந்த இடத்தில் இருக்க மாட்டார்கள். மத்திய வங்கி ஊழல் வாதிகள், மக்கள் பணத்தில் ஊழல் செய்தவர்கள், காணி கொள்கையர்கள் என எவரும் இருக்க மாட்டார்கள். 

வெள்ளை ஆடையை அணிந்து கொண்டதனால் இவர்கள் தூய்மையானவர்கள் என ஆகிவிடாது. ஆடை மட்டுமே தூய்மையாக வெள்ளையாக உள்ளது, ஆனால் அனைவரும் ஊழல் வாதிகள். இந்த சபையில் எனக்கு எதிராக எழுந்து குரல் எழுப்பும் நபர்களின் பின்புலம் எனக்கு நன்றாக தெரியும். ஒன்றின்பின் ஒன்றாக இவர்களின் உண்மையான மமுகத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment