இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தன பிரதித் தலைவரானார் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தன பிரதித் தலைவரானார்

இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தன பிரதித் தலைவரானார்-Ruwan Wijewardene Elected as UNP Deputy Leader
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவாகியுள்ளார்.

இன்று (14) அக்கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் பிரதித் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த செயற்குழுக் கூட்டத்தில், பிரதித் தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க மற்றும் ருவன் விஜேவர்தன ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்பொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு, இடம்பெற்ற வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவுக்கு 28 வாக்குகளும், ரவி கருணாநாயக்கவிற்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad