பிரபல பாதாளக்குழு உறுப்பினரான 'ரத்மலானே ரொஹா' என அழைக்கப்படும் தேவமுணி ஹெரல் ரோஹண டி சில்வா, பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (23) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு ட்ரோலர் படகில் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அவரை கைது செய்ய மேற்கொண்ட முயற்சியின்போது, அவர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபரிடமிருந்து ரி -56 ரக துப்பாக்கியொன்று, கைத்துப்பாக்கியொன்று, 3 இலட்சம் இந்திய ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment