தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழர் தரப்பிலுள்ள கட்சிகள், பொது அமைப்புக்கள் இணைந்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத்து தலைவர்களில் ஒருவராக விக்னேஸ்வரன் பதவி வகித்து வந்திருந்தார்.
வடக்கின் முதலமைச்சராக இருந்த காலம் முதல் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவரை இந்த இணைத் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகித்து வந்த நிலையிலேயே தற்போது திடீரென அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
தமிழர் தரப்புக்கள் ஒருமித்து பலமான தரப்புகளாகச் செயற்பட வேண்டிய சூழ்நிலையில் பலரையும் இணைத்து கட்சி சாராமல் பலமான அமைப்பாக செயற்படும் நோக்கிலேயே இணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment