மதீனாவைச் சேர்ந்த பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா காலமானார் - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

மதீனாவைச் சேர்ந்த பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா காலமானார்

சவூதி அரேபியா, மதீனாவைச் சேர்ந்த பேரறிஞரும் பிரபல பரோபகாரியுமான அஸ்ஸெய்யித் ஹபீப் உமர் பின் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா நேற்று முன்தினம் மாலை மதீனாவில காலமானார்.

இஸ்லாமிய தஃவாப் பணியை சர்வதேச ரீதியாக மேற்கொண்ட இப்பெரியார் ஆன்மீக கல்வி, சமய முன்னேற்றத்திற்காக உலகின் பல நாடுகளுக்கு நேரடி விஜயம் செய்து பாரிய அளவில் நிதி உதவி செய்துள்ளார்.

இலங்கையில் உள்ள பல அரபுக் கலாசாலைகளுக்கும் இவர் பாரிய உதவிகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவிற்காக சீனன்கோட்டைப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள், ஸாவியாக்களில் நேற்று ஜும்ஆத் தொழுகையின் பின் மறைவான (காயிபான) ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு துஆப் பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

சீனன்கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட வளர்ச்சியின் இவர் பாரிய பங்களிப்புச் செய்துள்ளார்.

பேருவளை விசேட நிருபர்

No comments:

Post a Comment