சஜித் அணியுடன் இணைந்து கொள்ள UNP க்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

சஜித் அணியுடன் இணைந்து கொள்ள UNP க்கு அழைப்பு

பரந்துபட்ட கூட்டணியில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ருவான் விஜயவர்த்தனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பரந்துபட்ட கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ருவான் விஜயவர்த்தன பிரதிதலைவர் மாத்திரமே என்பதால் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் கட்சியின் தலைவரான பின்னரே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாகாண சபை தேர்தலின்போது இணைந்து செயற்படமுடியுமென்றும் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment