அரசாங்கம் நாட்டின் உண்மை நிலையை மறைப்பதற்காக ஊடகங்களை பயன்படுத்துகிறது - கயந்த கருணாதிலக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

அரசாங்கம் நாட்டின் உண்மை நிலையை மறைப்பதற்காக ஊடகங்களை பயன்படுத்துகிறது - கயந்த கருணாதிலக்க

(செ.தேன்மொழி) 

அரசாங்கம் நாட்டின் உண்மை நிலையை மறைப்பதற்காக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

அத்தியவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்குவதாக கூறிய பசளைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களிடமிருந்து மறைப்பதற்காக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கம் நாட்டின் உண்மையை நிலைமையை மறைப்பதற்காக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றது. 

அதற்கமைய கடந்த காலங்களில் நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலே நாட்டின் பிரதான செய்தியாக காணப்பட்டது. இதன்போது ஆளும் தரப்பினர் நாட்டிலுள்ள காடுகளை முடிந்தளவில் அழிவுக்குட்படுத்தி வந்திருந்தனர். 

பின்னர் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யப் போவதாக பிரதான செய்தியொன்றை வெளியிட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொடுத்தார்கள். 

தற்போது அத்தியவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட பசளைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களிடமிருந்து மறைப்பதற்காக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment