விக்னேஸ்வரன் - டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது! - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

விக்னேஸ்வரன் - டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமுகமாக நிறைவுக்கு வந்தது. 

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறியும் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் மேலும் வழக்கிற்காக தாங்கள் செலவழித்த தொகையை திருப்பி செலுத்த வேண்டுமெனவும் வட மாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. 

இந்நிலையில், விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, டெனீஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சில நிபந்தனைகளை முன்வைத்து வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

விக்னேஸ்வரன் தலைமையில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் குறித்த நிபந்தனைகளை நிராகரித்ததுடன் தொடர்ந்தும் வழக்கை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து குறித்த வழக்கு இன்றையதினம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிபந்தனைகள் எதுவும் இன்றி வழக்கை வாபஸ் பெற டெனீஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார். 

தொடர்ந்து இரு தரப்பினரும் வழக்கை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad