தீப்பற்றிய இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி மரணம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

தீப்பற்றிய இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி மரணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வீட்டில் சமையல் அலுவல்களில் ஈடுபட்டிருந்த சமயம் மண்ணெண்ணெய் சிதறியதால் தீப்பற்றிக் கொண்ட 19 வயதான இளம் குடும்பப் பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி செவ்வாய்க்கிழமை மாலை 15.09.2020 மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் குமாரவேலியார் கிராமத்தில் வசித்து வந்த புவனேசராஜா சலோமியா (வயது 19) என்ற இளம் குடும்பப் பெண்ணே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமயம் மரணித்தவராகும்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை 11.09.2020 அன்று சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக மண்ணெண்ணெய் அவர் அணிந்திருந்த ஆடைகளில் சிதறியுள்ளது.

அதனைப் பொருட்படுத்தாது அவர் தீப்பெட்டியைக் கொளுத்தி அடுப்பை எரிய வைத்தபோது அது ஆடையில் பற்றிப் பிடித்ததால் தீக்காயங்களுக்குள்ளான அவர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சமயம் சிகிச்சை பயனின்றி புதன்கிழமை உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad