பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் எக்ஸ்மோ கருவி மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

கடந்த சில நாl;களாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment