(ஆர்.யசி,எம்.ஆர்.எம்,வஸீம்)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொதுமக்கள் முறைப்பாட்டு தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.
அமைச்சர் காமினி லொக்குகேயின் பெயரை அந்த பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார அதனை வழிமொழிந்தார் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேற்படி நியமனம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் முறைப்பாட்டு தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வின் போதே இடம்பெற்றது.
பொதுமக்கள் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகமகே, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், திலிப் வெதஆராச்சி, காதர் மஸ்தான், அசோக பிரியந்த, முஜிபுர் ரஹ்மான், குலசிங்கம் திலீபன், நிபுண ரணவக்க, கீதா குமாரசிங்க, ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவார்.
No comments:
Post a Comment