(எம்.மனோசித்ரா)
தேசிய அரசாங்கத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவவு என்பன எனது பொறுப்பின் கீழ் காணப்படவில்லை. என்னிடம் வெறுமனே பதவி மாத்தரமே காணப்பட்டது. எனவே நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பில் இரண்டாவது பொறுப்பாளியாக என்னை கருத முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்பது பதவி மாத்திரமேயாகும். எனக்கு சில நிறுவனங்கள் மாத்திரமே பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. வர்த்தமானிக்கமைய வேறு அமைச்சின் அடிப்படையிலேயே பணியாற்றினேன்.
அதற்கமைய எனது அமைச்சின் கீழ் இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு பாடசாலை, பாதுகாப்பு சேவை கல்லூரி, கெடட் போன்ற நான்கு விடயங்களே எனக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. எனது செயற்பாடுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே காணப்பட்டன.
பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வு என்பன எனது பொறுப்பின் கீழ் காணப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பில் இரண்டாவது பொறுப்பாளியாக நான் இருந்தேன் என்று கூற முடியாது. எனக்கு பதவி மாத்திரமே காணப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment