மாகாண சபைகளை இரத்து செய்யும் பிரேரணை வலல்லாவிட்ட பிரதேச சபையில் நிறைவேற்றம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

மாகாண சபைகளை இரத்து செய்யும் பிரேரணை வலல்லாவிட்ட பிரதேச சபையில் நிறைவேற்றம்

மாகாண சபைகளை இரத்து செய்யும் பிரேரணை ஒன்று வலல்லாவிட்ட பிரதேச சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலல்லாவிட்ட பிரதேச சபை தவிசாளரான உதேனி அத்துக்கோரள தலைமையில் இன்று கூடியது.

மகாண சபை முறையை நீக்கி, அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பிரேரணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாலக சமரவீர முன்வைத்தார்.

அதன் பின்பு பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது, சபைக்கு சமூகமளித்திருந்த 23 பேரில் 21 பேர் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஒருவர் சபையில் இருக்கவில்லை என்பதுடன் மற்றொருவர் வாக்களிக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad